மட்டக்களப்பு நகரில் பகுதியில் முகக்கவசம் அணியாதோர் பொலிஸாரால் கைது!

மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க தலைமையில் மட் டகளப்பு நகர பகுதியில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மட்டகளப்பு நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் பலர் கைது செய்யப்பட்டு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்ப்படுத்தபட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், வீதிகளில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பலர் கைது செய்யப்பட்டு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்து .

மேலும் மட்டு நகர் பகுதிகளில் 2 பிரிவாக சென்று பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடத்துடன் தொற்று நீக்கும் வகையில் கிருமி நாசினி திரவம் விசிறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்