இலங்கையர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்த ஐக்கிய அரபு இராச்சியம்!

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பயணிகள் நாட்டுக்குள் நுழைவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எதிர்வரும் புதன்கிழமை இரவு முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தேசிய மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளையும் இடைநிறுத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.

பிற நாடுகளின் ஊடாக, ஐக்கிய அரபு இராச்சியதிற்குள் நுழையும் பயணிகள் இந்த நான்கு நாடுகளிலும் 14 நாட்களுக்குள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதற்கான சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்