மட்டக்களப்பில் RDA பெயரிடப்பட்ட பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்திய சாரதி உட்பட நால்வர் கைது!

மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தகாரர் கம்பனி ஒன்றிற்கு சொந்தமான வீதி அதிகாரசபை பெயரிடப்பட்ட பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்திய சாரதி உட்பட கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 4 பேரை இன்று (11) மாலை கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து கேரளா கஞ்சா மற்றும் பிக்கப் ரக வாகனம் ஒன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பதிவு பொறுப்பதிகாரி பி,கே பண்டார தெரிவித்தார்.

இன்று மாலை திருப்பொருந்துறை பகுதியில் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது 155 கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் அவரிடத்தில் இருந்து 3,100 மில்லிக் கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன் கல்லடி திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 73 கிராம் கஞ்சாவை மீட்டனர்.

அதேவேளை மட்டக்களப்பு திருகோணமலை வீதி வைச்சந்தியில் மோட்டர் சைக்கிள் ஒன்றில் கஞ்சாவை எடுத்து வந்த ஊறணியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து 3,220 மில்லிக்கிராம் கேரளாக கஞ்சாவை மீட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.