கிழக்கு மாகாண ஆளுநருக்கு கொரோனா தொற்று!

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

பி.சி. ஆர் பரிசோதனை செய்தபோது, தனக்கு கொரோனா ​வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தன்னை சுயதனிமையில் ஈடுபடுத்திகொண்ட அவர், கடந்த சில நாள்களாக தன்னுடன் மிகநெருக்கமாக பழகியவர்கள், தங்களை தாங்கள் சுயதனிமைப்படுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்