அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நோன்புப் பெருநாள் செய்தி!

அல்லாஹ்வின் நாட்டத்தில் சமூகக் கெடுபிடிகள் ஒழிய ஈகைத்திருநாளில் இறைஞ்சுவோம்!

ஈகைத்திருநாளின் இறைஞ்சுதல்களில் முஸ்லிம் சமூகம்தலைவர்கள் மற்றும் அறிஞர்களது ஈடேற்றங்களுக்கும் கையேந்துவோம்.

புனித நோன்பாளிகளின் பிரார்த்தனைகளும்அநீதியிழைக்கப்பட்டோரின் ஆராதனைகளும் “அல்லாஹ்விடத்தில்” அதிசீக்கிரம் அங்கீகரிக்கப்படுகிறது.

இன்றைய நிலையில் எமது சமூகம் நோன்பு நோற்றிருக்கின்றது. மட்டுமன்றி பாரிய அநீதிக்கும் ஆளாகியுமுள்ளது. இதனால்இறைவனிடத்தில் எமது பிரார்த்தனைகள் நிச்சயம் ஈடேறும்.

ரமழானின் பரிந்துரைகள் இறைவனிடம் ஒப்படைக்கப்படும் காலமிது. இம்மாதத்தில் நாம் செய்த அமல்கள்தியாகங்களுக்கு நற்கூலிகளாக இறைவன் நாம் கேட்கும் ஹலாலான “ஹாஜத்துக்களை” அள்ளித் தரக் காத்திருக்கிறான். இந்த அருட்கடாட்சங்கள் சிறைகளிலும்விசாரணைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உட்பட அரசியல் தலைவர்கள்அறிஞர்கள்ஊடகவியலாளர்கள் மற்றும் ஏதும் அறியாத அப்பாவிகளுக்கும் விடுதலை கிடைக்கப் பிரார்த்தியுங்கள்.

அல்லாஹ்” நாடுவதைத் தடுக்கவும்நாடாதவற்றை வழங்கவும் எவருக்குமே முடியாது. எனவேஅவனது நாட்டத்தால்நமது சமூகத்தின் தலைவர்கள்அறிஞர்கள் விடுதலையாகி வெளிவரநாம் கையேந்திப் பிரார்த்திப்போம். புனையப்பட்ட காரணங்களாலும்பழிதீர்க்கும் குரோதங்களாலுமே முஸ்லிம் சமூகத் தலைவர்கள்அறிஞர்கள் அநியாயமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின்றிஇவர்களைத் தடுத்து வைத்து நாட்களைக் கடத்தும் சதித்திட்டங்கள்சத்தியத்துக்கு முன்னால் விரைவில் தகர்க்கப்படும். இதுதான்எமது கட்சியின் நம்பிக்கை.

துரதிஷ்டவசமாக இடம்பெற்ற ஈனச் செயல்களுக்காகமுஸ்லிம் சமூகத்தை கருவறுப்பதுதான் எமக்கு ஏற்பட்டுள்ள கவலைகள். இந்தக் கவலைகள் நீங்க முஸ்லிம்கள் அனைவரும் ஈகைத்திருநாளில் பிரார்த்திப்போம்.

அதுமாத்திரமின்றி, பலஸ்தீன மண்ணில் இடம்பெற்று வரும் அட்டூழியங்களிலிருந்து, அங்கு வாழும் மக்களை இறைவன் பாதுக்காக வேண்டும் எனவும் இந்தப் புனித நாளில் இருகரம் ஏந்தி இறைவனைப் பிரார்த்திப்போம்!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்