பாடசாலை கல்வியை முடித்து பிள்ளைகள் 21 வயதை அடையும் போது பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய ஏற்பாடு!

புதிய மறுசீரமைப்பின் ஊடாக எட்டு மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் 21 வயதை அடையும் போது, பிள்ளைகள் பட்டப்படிப்பை முடித்துக் கொள்கின்றார்கள். இலங்கை மாணவர்களுக்கும் இவ்வாறான வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.

பத்தாம், 11ஆம் வகுப்பிற்காக இதுவரை இருந்த காலவரையறை ஒன்றரை வருடமாக குறைக்கப்படவுள்ளது. இறுதி இரண்டு வருடங்களுக்குள் இதன் பலன்களை மாணவர்களுக்கு வழங்குவது நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.