நினைவு தூபிகளை உடைத்து நினைவு கூறல் தடுக்கப்படுவதால் மன வடுக்க்களை அகற்ற முடியாது -ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி .தவராசா

 

இறுதி போர் மக்களை மீ ட்பதற்கான போர் என்று அரசாங்கம்
ஆயிரம் விளக்கங்களைக் கொடுக்காலும் அது இனவழிப்புக்கான அத்தனை அடையாளங்களை கொண்டுள்ளது என்பதை

கூர்ந்து நோக்கும் போது மிக தெளிவாகத் தெரியும் இரானுவ தரப்பில் தமிழ்
பொது மக்களின் உயிர்களும் ஆயிரக்கணக்கில் பரிக்கப்பட்டன .இங்கு பொது மக்களின் உயிர் பரிக்கப்பட்டமை குறித்து பதில் சொல்லக் கடப்பாடுடையவர்கள் என்று யாரை அடையாளப்படுத்துவது என்ற விவாதம் நிறைவேறவில்லை

ஆனால் தமிழ் மக்கள் உயிர்கள் பரிக்கப்பட்டமை என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது .

இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் உரிமை ஒவ்வொரு உறவுக்கும் இருக்கின்றது .

அதைப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை

இது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விடயம் மிகவும் உணர்ச்சி பூர்வமானது

எனவே இந்த விடயத்தில் இனநோக்கில் எரியப்படும் ஒவ்வொரு கல்லும் மிகவும் ஆபத்தானவை .
இந்த தவறை கடந்த வரலாற்று நிகழ்வுகளில் இருந்து உணர்ந்து கொள்ளும் வாய்ப்பும்
விளங்கக கொள்ளும் சந்தப்பமும் இருக்கின்றது

தமிழர்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளில் மனவுணர்களில் இனத்துவ ரீதியில் கல்லெறிவதை ஏற்கின்றவர்கள்

நிறுத்திக் கொள்ள வேண்டும் .அதுதான் மிகவும் சிறந்தது நட்பான சூழலை இணக்கப்பாட்டுடன் நிறுவ உதவக்கூடியது

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிகளை உடைத்து அகற்றுவதாலும் அவற்றை சிதைப்பதாலும்
தமிழ் மக்களின் மனதில் படிந்துள்ளதுள்ள துன்பத்தின் வடுக்களை இல்லாதொழித்து விட முடியாது .

இவ்வாறனதொரு நிலையில் தங்கள் உறவுகளை பறி கொடுக்க மக்கள் அஞ்சலி செய்ய கண்ணீர் விட்டழுது ஆத்ம சாந்திக்கான ஈழக்கடன்களில் ஈடுபடவுள்ள உரிமை பண்பாடு நாகரிகம் மறுக்கப்படுவதை கடைசி தமிழன் இந்த மண்ணில் வாழும் வரை அந்த வடு நினைவு கூறப்படும் அதை எந்த சக்தியாழும் வல்லமையாலும் ,அதிகாரத்தாலும் தடுக்க முடியாது அது தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்