இலங்கையில் மொத்த கொரோனா மரணங்களில் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது

இலங்கையில் மொத்த கொரோனா மரணங்களில் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது

இலங்கையில் நேற்றைய (18) தினம் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.

இதற்கமைவாக ,இலங்கையில் இதுவரையில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 981 இல் இருந்து 1015 ஆக அதிகரித்துள்ளது.

இது கொரோனா தொற்று ஏற்பட்ட காலம் முதல் இலங்கையில் ஒரே நாளில் பதிவாகிய அதிகூடிய மரணங்களின் எண்ணிக்கையாக அமைந்துள்ளது.

இதில் இரத்தினபுரிப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன் கொவிட் நியூமோனியா காய்ச்சலினால் மரணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தெமட்டக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் கொவிட் நியூமோனியா காரணமாக மரணித்துள்ளார். அதேவேளை, றாகம பிரதேசத்தைச் சேர்ந்pத 38 வயதுப் பெண் நீரிழிவு மற்றும் கொவிட் நியூமொனியா காரணமாக மரணித்துள்ளார். மரணித்த ஏனைய 31 பேரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.