கிழக்குப் பல்கலைக்கழக அனுமதி : உளச்சார்புப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பம்

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
இளங்கலைமாணி மொழிபெயர்ப்புக் கற்கைநெறி (சிறப்பு)
(தமிழ் மற்றும் ஆங்கிலம்)
பல்கலைக்கழக அனுமதி 2020/2021
உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test)

இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கைநெறிக்குரிய உளச்சார்புப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பம்

இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கைநெறிக்கு (நான்கு வருடம்) அனுமதி பெற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து உளர்சார்புப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் யாவும் 29.05.2021 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அனுமதிக்கான பொது நிபந்தனைகளும் தகைமைகளும் : 

இக்கற்கைநெறியைத் தெரிவுசெய்ய விரும்பும் விண்ணப்பதாரிகள் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற க. பொ. த. (உயர்தரப்) பரீட்சையில் எப்பிரிவிலும்; ஆகக்குறைந்தது மூன்று (03) பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருப்பதோடு, 2020 / 2021 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக அனுமதிக்கான கையேட்டின் பிரகாரம் அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகளையும் பெற்றிருக்க வேண்டும்.

உளச்சார்புப் பரீட்சை:

மேற்படி கற்கைநெறி அனுமதிக்கான விண்ணப்பதாரிகள் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தினால்; நடத்தப்படும் தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழித் திறமையைப் பரீட்சிக்கும் நோக்கினை அடிப்படையாகக் கொண்ட ஓர் எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றுதல் வேண்டும். இப்பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை:

முதலில் விண்ணப்பதாரிகள் http://www.esn.ac.lk/  என்ற கிழக்குப் பல்கலைக்கழக இணையத்தள முகவரி ஊடாக தத்தமது விண்ணப்பங்களை நேரடி இணையவழி (Online)  மூலம் விண்ணப்பித்தல் வேண்டும். அதன் பின்னர், pdf விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து (Download) அதனைப் பூர்த்தி செய்து பதிவுத் தபால் (Registered post) மூலம் உரிய முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். எவ்வாறாயினும் நேரடி இணையவழி (Online)  மூலம் விண்ணப்பித்தல் இங்கு அவசியமானது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் ரூ. 1000.00 ஐ எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையில், கிழக்குப் பல்கலைக்கழகம், செங்கலடி, கணக்கு இலக்கம் 227100140000024 இல் செலுத்திய பற்றுச்சீட்டு, (காசோலைகள், காசுக்கட்டளைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது) பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதிவானால் உறுதிப்படுத்தப்பட்ட க. பொ. த. (உயர்தரப்) பரீட்சை – 2020 இற்கான பெறுபேற்றுப் பத்திரத்தின் பிரதி (Photo copy)> , உளச்சார்புப் பரீட்சைக்குரிய அனுமதி அட்டையை அனுப்புவதற்கான 10 ½ ஒ 22 ½ செ. மீ அளவு கொண்ட சுய முகவரியிடப்பட்ட ரூ. 15 பெறுமதியான முத்திரையொட்டிய ஒரு கடித உறை ஆகியவற்றை இணைத்து பிரதிப் பதிவாளர், கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி எனும் முகவரிக்கு 29. 05. 2021 அன்று அல்லது அதற்கு முன்னதாகக் கிடைக்கப் பெறும் வகையில் பதிவுத் தபால் (Registered post) மூலம் அனுப்புதல் வேண்டும். அத்துடன், கடித உறையின் இடது பக்க மேல்மூலையில் ‘மொழிபெயர்ப்புக் கற்கைநெறி 2020 / 2021’ எனக் குறிப்பிடுதல் வேண்டும். பரீட்சைப் பெறுபேற்றில் அல்லது பெயரில் மாற்றங்கள் ஏதும் இருப்பின் அதற்குரிய சத்தியக்கடதாசி (Affidavit) சமர்ப்பிக்கப்பட்டு உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

பல்கலைக்கழக அனுமதிக்குரிய ஆகக்குறைந்த தகைமைகளைக் கொண்டிராததும், பணம் செலுத்திய பற்றுச் சீட்டு சமர்ப்பிக்கப்படாததும், பெறுபேற்றுப் பத்திரத்தின் உறுதி செய்யப்பட்ட பிரதிகள் இணைக்கப்படாததும், விண்ணப்ப முடிவுத் திகதிக்குள் கிடைக்கப் பெறாததுமான வி;ண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும்.

பாடநெறிக்குரிய பிரவேச அனுமதித் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டை தபால்மூலமும் மின்னஞ்சல் ஊடாகவும் அனுப்பி வைக்கப்படும். பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரிகளின் பெயர்கள் http://www.esn.ac.lk  என்னும் இணையத்தளத்திலும் வெளியிடப்படும்.

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0652240584

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.