தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 493 பேர் நேற்று கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில், நேற்று 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பாதுகாப்பு முகக் கவசங்கள் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், 10 ஆயிரத்து 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும், சுகாதாரத் தரப்பினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படுமாறும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.