தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்ட பகுதிகளுக்கு மதுபான போத்தல்களை விற்பனைக்காக கொண்டுச் சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது…

(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவ பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்ட பகுதிகளுக்கு குறுக்கு வீதியில் மதுபான போத்தல்களை விற்பனைக்காக கொண்டுச் சென்ற சந்தேக நபர் ஒருவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரை இன்று (21.05.2021) அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 25 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கொரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு மாலை 6 மணிவுடன் மதுபானசாலைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அட்டன் மற்றும் நோர்வூட் பகுதிகளில் அந்த உத்தரவு மீறப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்