யாழில் 7,251 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன-மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 7251 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணியதன் அடிப்படையில் அதிகளவான குடும்பங்கள் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற இடைக்கால நிவாரண உதவியாக  10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொதியினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றோம்.

அதனடிப்படையில் யாழில் இதுவரை சுமார் 7,251 குடும்பங்களுக்கு  10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொதி, தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக உதவிகள், வழங்கப்பட்டு வருகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.