வவுனியா மாவட்டம் பயணத்தடையினால் முடங்கியது : அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி!

நாடு பூராகவும் மீண்டும் முழுமையான பயணத்தடை நேற்று (21) இரவு முதல் அமுலாகியுள்ள நிலையில் இன்றையதினம் (21) வவுனியா நகரம் முழுமையாக முடங்கி வெறிச் சோடிக் காணப்படுகின்றது.

வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் வீதிகளில் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மருந்தகங்கள் , சுகாதார துறையினர், ஆடைத் தொழிச்சாலையினர், விவசாயிகள் தமது தேவை நிமிர்ந்தம் சென்று வருவதுடன் பொது மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்