சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் திருகோணமலை நோக்கி புறப்பட்ட வானொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து;ஒருவர் பலி

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியில் இன் று(22)அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார் என தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் திருகோணமலை நோக்கி புறப்பட்ட வானொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

தம்பலகாமம் 99 ஆம் கட்டை பகுதியில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது .

இதில் வான் சாரதியான கண்டி வீதி, 5ஆம் கட்டை சீனக்குடா பகுதியை சேர்ந்த விராஜ் மதுசங்க வயது (28)  உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய சீமெந்து லொறி சாரதியை கைது செய்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் தளவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தம்பலகாமம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்