மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்ற நபர்களுக்கு அபராதம்!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக மாடுகளை கடத்தி கொண்டு சென்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 17 ஆயித்து 100 ரூபா அபராதம் விதித்து மீட்கப்பட்ட 6 மாடுகளையும் அரசு உடமையாக்கி நேற்று (21) நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (06) அதிகாலை வவுணதீவு பிரசேத்தில் இருந்து வாகனத்தில் காத்தான்குடி பிரதேசத்திற்கு 6 மாடுகளை கடத்திச் சென்ற ஜீப் ரக வாகனத்தை வலையிறவு பாலத்துக்கு அருகில் காவல்துறைசியினர் மடக்கிபிடித்து 3 பேரை கைது செய்ததுடன் கடத்திச் செல்லப்பட்ட 6 மாடுகளையும் வாகனம் ஒன்றையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை நேற்று வெள்ளிக்கிழமை (21) நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்