நாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில்…

பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் வீதி தடைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய சேவை மற்றும் அனுமதிக்கப்பட்ட பயணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நேற்று இரவு (மே 21) இரவு 11 மணி முதல் மே 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் பின்னர் அதேநாள் இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் பயணத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்