சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்

ஹட்டன் பகுதியில் 1990 சுவசெரிய நோய்க்காவு வண்டியின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நபர் ஒருவர் மாடியில் இருந்து விழுந்துள்ளதாக இன்று (22) அதிகாலை 2 மணியளவில் 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு நோய்க்காவு வண்டி சென்றுள்ளதுடன் இதன்போது மாடியில் இருந்து விழுந்ததாக கூறப்பட்ட நபருக்கு எவ்வித காயங்களும் இல்லாத காரணத்தினால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த சிலர் ஓட்டுனர் மற்றும் உதவியாளரான பெண்ணின் மீது தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் காவல்துறையினர் அவ்விடத்திற்கு சென்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்