வவுனியா – நெளுக்குளம் பகுதியில் ஹெரோயினுடன் கணவன் – மனைவி கைது

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளினை விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

நெளுக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுதது குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது விற்பனைக்காக சிறு சிறு பொதிகளாக பொதி செய்து வைக்கப்பட்ட ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய குடும்ப பெண்ணும், அவரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருளினை குறித்த பெண் விற்பனை செய்ய முயன்ற வேளை குறித்த பெண்ணின் கணவன் அங்கு இருக்காத காரணத்தால் கணவனை பொலிஸார் விடுதலை செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரான பெண்ணை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்