வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்!

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் நேற்று (22) மாலை மரணமடைந்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

வவுனியா, கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய த.பாலகுமார் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

இதேவேளை, கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் இடம்பெற்ற நான்காவது மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.