வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை புயலாக மாற்றமடையக்கூடுமென்று எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியிலும் அதனையடுத்து நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் விரைவாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்குத் செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை புயலாக மாற்றமடையக்கூடுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு அந்தமான் கடல் பிரதேசம் மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்திலும் கடல் திடிரென கொந்தழிப்புடன் காணப்படுவதுடன் இடியுடன் கூடிய மழையும் பெய்யலாம். 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்