வடமராட்சி கடலோரப்பகுதியில் கேரள கஞ்சா மீட்பு!

வடமராட்சி, தொண்டமானாறு கடலோரப் பகுதியில் நேற்று சனிக்கிழமை கடற்படை நடத்திய சிறப்பு ரோந்துப் பணியின் போது, கடற்கரையில் கைவிடப்பட்ட 131 கிலோ 800 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்கள் கைவிட்ட 4 பொதிகளில் 131 கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டது. கேரள கஞ்சாவின் சுமார் 39.54 மில்லியன் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது.

கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளுக்கு ஏற்ப மீட்கப்பட்ட கேரள கஞ்சாவை தீயிட்டு அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.