புத்தளம் நகர பிதா பாயிஸ் காலமானார்!

புத்தளம் நகர பிதாவும், முன்னாள் பிரதி அமைச்சருமான கே.ஏ. பாயிஸ் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

விபத்தொன்றின் காரணமாகவே உயிரிழந்ததாக புத்தளம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட இவர், பிரதி அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.

புத்தளம் நகர சபையின் நகர பிதாவாகா நீண்ட காலம் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்