50 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் உள்ள 50 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்று (23) இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதன் ஊடாக சுமார் 3,500 கட்டில்களை கொரோனா சிகிச்சைக்காக உட்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையில் சேவையாற்றுபவர்களுக்கு கொரோனா சிகிச்சை தொடர்பில் பயிற்சி வழங்கவுள்ளதுடன் அவர்களுக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்