பொருளாதார மத்திய நிலையங்கள் சில இன்று திறப்பு

பேலியகொட மெனிங் மரக்கறி சந்தை, புறக்கோட்டை தொகை விற்பனை நிலையங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் சில இன்று (24) காலை முதல் திறக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தம்புத்தேகம, நுவரெலியா, கெப்பிடிபொல, வேயங்கொட, மீகொட மற்றும் எம்பிலிபிட்டிய பொருளாதார மத்திய நிலையங்கள் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் திறக்கப்படவுள்ள கடைகளுக்கு தேவையான பொருட்களை தொகை விற்பனை செய்வதற்காக இவ்வாறு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொவிட் நிலமையை அவதானித்து தொடர்ந்து போக்குவரத்து கட்டுப்பாடு விதிப்பதா என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்