வவுனியா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையத்திற்கு வர்த்தக சங்கத்தினரினால் உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களை கண்காணிக்கும் முகமாக சிசிரிவி கருவியும் அவர்களுடன் தொடர்பாடலை மேம்படுத்த இரு வழி கலந்துரையாடல் ஸ்பிக்கர் , மைக் வசதிகள் தேவையேன வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினால் வவுனியா வர்த்தக சங்கத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் சிசிரிவி கருவி மற்றும் ஸ்பிக்கர் , மைக் வசதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த பொருட்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் ஜெறல்டின் நிலக்சன் அவர்களிடம் வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன் உள்ளிட்ட குழுவினர் வழங்கி வைத்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்