உயிருக்கு போராடும் யானை சதுப்பு நிலத்திலிருந்து மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை!

வவுனியா புளியங்குளம் சதுப்புநில பகுதியில்  காயமடைந்து  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  யானையை நேற்றையதினம் சதுப்பு நிலத்திலிருந்து மேற்பரப்பிற்கு  கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா புளியங்குளம் புதூர் காட்டு பகுதியில் கடந்த (14) ஆம் திகதி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் காட்டில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் 12 வயது மதிக்கத்தக்க யானைக்கு இராணுவத்தினர், வனஜீவராசிகள் திணைக்களத்தினர், கிராம மக்களின் உதவியுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் கல்நடை வைத்தியர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றார்.

இந்நிலையில் குறித்த யானையை விரைவாக குணப்படுத்த ஒன்பதாம் நாளான நேற்றுமுன்தினம் வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரதாபன், இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், மடுகந்தை பௌத்த துறவி மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையினை பார்வையிட்டதோடு, குறித்த யானை விரைவில் குணப்படுத்த என்ன மாற்றுவழி செய்யலாம் என உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

இதன் பிரகாரம் 11 நாட்களாக  சதுப்பு நிலத்தில் உள்ள யானை மேலதிக சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடக்கு மாகாண கால்நடை வைத்தியர் கிரிதரன், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் சந்தனா ஜெயசிங்க, வவுனியா பிற கால்நடை அதிகாரிகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வன்னி பாதுகாப்புப் படைகள் மற்றும் ஏராளமானோர் இணைந்து சதுப்பு நிலத்திலிருந்த யானையை நேற்றைய தினம் (23)  மாலை வெளியே எடுக்கப்பட்டு நிலத்தின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டிருந்து.

மீட்கப்பட்ட குறித்த யானை நிலத்திலிருந்து மேற்பரப்பிற்கு  கொண்டு வரப்பட்டு  தொடர்ச்சியாக சிகிச்சை  அளிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Elephant 7

 

Elephant 7 1

 

Elephant 4

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.