பூஸா சிறையில் 60 கைதிகளுக்கு கொரோனா தொற்று!

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பூஸா சிறைச்சாலை நிர்வாகம் கூறியுள்ளது.
69 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றுக்குள்ளான கைதிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
காலி, மாத்தறை மாவட்டங்களின் நீதிமன்றங்களால் விளக்கமறியல் கைதிகள் பூஸா சிறைக்கு தனிமைப்படுத்தலுக்காகக் கொண்டுவரப்படுகின்றனர்.
சிறைச்சாலையின் நான்கு வார்டுகளில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கட்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்