இரா துரைரட்ணசிங்கத்திற்கு இணைய வழிமூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அஞ்சலி…

திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா துரைரட்ணசிங்கத்திற்கு இணைய வழிமூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.
கருத்துரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன் , செல்வம் அடைக்கலநாதன் அடைக்கலநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா அரியநேத்திரன், யோகேஸ்வரன், சாந்தி சிறீஸ்கந்தராசா தமிழரசுக் கட்சியின் செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமான வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் இரா துரைரட்ணசிங்கத்துடன் கல்விப்பணி செய்தவர்கள் மற்றும் அவர்களது மாணவர்கள் எனப் பலரும் வழங்க நன்றியுரையினை இரா துரைரெட்ணசிங்கம் அவர்களின் மகள் மற்றும் மருமகள் ஆகியோர் வழங்கினர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினர் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்