வவுனியா மூன்றுமுறிப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
வவுனியாவில் மூன்று முறிப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர் உட்பட மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (24.05) இரவு வெளியாகின.
அதில், திருநாவற்குளம் பகுதியில் தண்ணீர் கடை நடத்தும் பட்டக்காட்டை சேர்ந்த ஒருவருக்கும், பெரியகோமரசங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள அரலியா ஹோட்டலில் நான்கு பேருக்கும், மதவாச்சி பகுதியை சேர்ந்த இருவருக்கும், நெடுங்கேணி பெரிமடுபகுதியை சேர்ந்த ஒருவருக்கும், அவுசலப் பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், மூன்று முறிப்பு பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் எரிக்கலம்கள் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் என 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை