எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் மீண்டும் தீப்பரவல்

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், மீண்டும் அதில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த கப்பலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கணிப்பீட்டு அறிக்கையை விரைவில் வழங்குமாறு, அரசாங்கம் அதுதொடர்பாக ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள நெதர்லாந்து ஆய்வுக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கூட்டம் ஒன்று நேற்று (24) சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்