திருகோணமலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயம்!

திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் இருந்து கடந்த 23ம் திகதி கடலுக்கு படகில் சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை என திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர்  சங்கத்தின் தலைவர் தங்கவேலாயுதம் கமல் தெரிவித்தார்.

இவ்வாறு கடலுக்குச் சென்றவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த 21 வயதான இரண்டு பேரும், 34 வயதான ஒருவரும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக கடற்படையினருக்கும், கடற்றொழில் திணைக்களத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.