அடை மழை காரணமாக விவசாய காணிகள் பாதிப்பு!

(க.கிஷாந்தன்)

வானிலை சீற்றத்தினால் கடந்த சில தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நுவரெலியா – டயகம பிரதேசத்தில் 24.05.2021 நேற்று முதல் பெய்த கடும் மழை காரணமாக டயகம பிரதேசத்திலிருந்து வரும் ஆகர ஆறு பெருக்கம் எடுத்ததனால் டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, திஸ்பனை, ஆகரகந்தை, நாகசேனை, லிந்துலை போன்ற ஆற்றோர பிரதேசங்கள் நீரினால் மூழ்கியுள்ளது.

இதனால் இப்பிரதேசங்களில் விவசாய காணிகள் முற்றாக பாதிப்படைந்துள்ளதுடன், தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் ஆற்று நீர் உட்புகுந்துள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.