அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசி ,முதல் தடுப்பூசியை அரசாங்க அதிபருக்கு ஏற்றப்பட்டது

(ஹஸ்பர் ஏ ஹலீம்)
அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கிணங்க திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் சிலரிற்கு  முதல் கட்டமாக   இன்று (25) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்சன பாண்டிகோராள முதல் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்