கல்முனை பிராந்தியமும், பணிப்பாளரின் செயற்பாடுகளும்!

(பைஷல் இஸ்மாயில் )
கிழக்கு மாகாணத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நான்குள்ளது. அதில் கல்முனைப் பிராந்தியமும் ஒன்றாகும். அதன் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் அவர்களின் வேகம், விவேகம் மற்றும் செயற்பாடுகள் யாவும் கல்முனைப் பிராந்திய பொதுமக்களை மட்டுமல்லாது ஏனைய பிராந்திய மக்களையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரச் செய்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள நான்கு பிராந்தியங்களில் கல்முனைப் பிராந்தியம் மிகக் கடுமையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்ற கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தலைமையின் கீழ் இயங்கி வருகின்ற சுகாதாரக் குழுவினரின் நடவடிக்கைகள் என்று சொன்னால் அது மிகையாகாது.
மேலும், அவர்களுடன் ஒருமித்ததான பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் நடவடிக்கைகளையும் நாம் மறந்து விட முடியாது. அவர்களின் ஈடுபாடும் இன்றியமையாதவையாகக் காணப்படுகின்றது.
கொரோனா தொற்றிலிருந்து நாட்டையும், மக்களையும், தனது பிராந்தியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையில் இன மத வேறுபாடுகளுக்கப்பால் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இரவு பகல் பாராது, பல எதிர்ப்புக்களையும் தாண்டி செயற்பட்டு வருகின்ற ஒரு மிக தைரியமான இரும்பு மனிதராக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் களத்தில் நின்று செயற்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.
கொரோனா நோய்த் தொற்றுக்கு இன, மத, மொழி தெரியுமா??? தெரியவே தெரியாது. அதுபோலேவேதான் சுகாதார சேவைகளின் நடவடிகைகளும், செயற்பாடுகளும் காணப்படும். இதை சிலர் பிழையாக விளங்கிக் கொண்டு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிராகவும்,
இன மன செயற்பாடுகளைத் தூண்டி விடுகின்ற முகநூல் பதிவுகளையும், மக்களிடத்தில் பிழையான கருத்துக்களையும் பரப்பி வருகின்றனர்.
இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை சிறிதுகூட கண்டுகொள்ளாமல் தனது நடவடிக்கைகளில் ஒரு குறையேனும் விடாது, இந்தக் கொடிய கொரோனா தொற்றிலிருந்து நாட்டையும், மக்களையும், தனது பிராந்தியத்தையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் மிகத் தீவிரமாக செயற்பட்டு வருகின்றவரை நாம் பாராட்டியாக வேண்டும்.
#குறிப்பு
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றும் அதன் இறப்பு வீதமும்; (நேற்று வரையிலான கணிப்பீடு)
மட்டக்களப்பு பிராந்தியம் – 48, இறப்பு 02
திருகோணமலை பிராந்தியம் – 28, இறப்பு 06
அம்பாறை பிராந்தியம் – 17, இறப்பு 01
கல்முனை பிராந்தியம் – 10, இறப்பு இல்லை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்