வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (25.05) இரவு வெளியாகின.

அதில், நெளுக்குளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கும், நவகமுக பகுதியில் ஒருவருக்கும், எருகலங்கல் பகுதியில் ஒருவருக்கும், கந்தபுரம் பகுதியில் ஒருவருக்கும், தவசியாகுளம் பகுதியில் ஒருவருக்கும், கிடாச்சூரி பகுதியில் ஒருவருக்கும் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்