பனைமரம் முறிந்து  விழுந்ததனால் வீடு சேதம் !

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை முருகமூர்த்தி ஆலயத்திற்கு பின்னாலுள்ள வீடொன்று பனைமரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளது.

நேற்று(25) மாலை வீசிய கடும் காற்றினால் அருகிலுள்ள காணிலுள்ள பனைமரம் முறிந்து  வீழ்ந்த்தனால் வீடொன்று சேதமடைந்துள்ளது.

இதனால் வீட்டிலிருந்த ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்துள்ளன. இதனால் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வீட்டிற்கு முன்னூலுள்ள வெற்றுக்காணியிலிருந்த பனை மரமும்  வீழ்ந்துள்ளது. ஏனைய பனை மரங்கள் தற்போது வெட்டப்படுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்