அம்பாறையைச் சேர்ந்த கொரோனா நோயாளி கொள்ளுப்பிட்டி வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நேற்று மாலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நோயாளி அம்பாறையைச் சேர்ந்த முஹமது ரிகாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அந்த நபர் குறித்த தகவல் அறிந்தால் அதனை வழங்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையிர் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்