கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவருக்கு கொரோனா

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயமடைந்த இருவர் நேற்று மீட்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்