சட்டவிரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யபட்டதுடன் 18 லீட்டர் கள்ளு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று புதன்கிழமை காலை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.சமந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பெண்ணின் வீட்டினை சோதனையிட்டு தேடியதில் நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டு வைத்திருந்த நிலையில் 18 லீட்டர் கள்ளு மீட்கப்பட்டுள்ளது .
விநாயகபுரத்தை சேர்ந்த 41 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை