கொரோனா சடலங்களுக்கான காட்போட் சவப்பெட்டிகள் அறிமுகம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்காக தெஹிவளை – கல்கிஸை நகர சபையினால் காட்போட் சவப்பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அப்புறப்படுத்தப்பட்ட காகிதம் மற்றும் காட்போட் அட்டைகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெட்டிகள் தயாரிக்கப்படுவதாக நகரசபை உறுப்பினர் பிரியந்த சஹபந்து கூறியுள்ளார்.

இதன் ஊடாக,  சவப்பெட்டிகளின் உற்பத்திக்காக வெட்டப்படும் மரங்களை காப்பாற்றுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு  சவப்பெட்டியை சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்