கொரோனா மேலும் 1,203 பேர் பூரணமாக குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 1203 பேர் குணமடைந்து இன்று (26) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 334 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 69ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தக் கொடிய தொற்றினால் நாட்டில் இதுவரையில் ஆயிரத்து 269 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்