இலங்கை மின்சார சபைக்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள்!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மின்சார சபையின் தொலைபேசி சேவைகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு சுமார் 5 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வருவதாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் அழைப்புகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கு கூட பதிலளிப்பதில் ஊழியர்கள் நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் திருத்தப் பணிக் குழுக்கள் 230 வாடிக்கையாளர் மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், அவை 24 மணி நேரமும் செயலில் உள்ளன.

இந்த சிரமத்தை உணர்ந்து இலங்கை மின்சார சபையுடன் ஒத்துழைத்து செயற்படுமாறும் பொது மக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்