தப்பிச் சென்ற கொவிட் 19 தொற்றாளர் பொலிஸாரினால் கைது!

கொழும்பு கொள்ளுபிட்டி பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் 19 தொற்றாளர் தமன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கொவிட் தொற்றாளராக இனங்காணப்பட்ட பின்னர் கடந்த 25 ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேகநபர் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் தற்போதைய நிலையில் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.