மட்டக்களப்பில்,இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு குடும்ப பெண் ஒருவர் கொலை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் பெண்ணொருவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாதாக இன்று வியாழக்கிழமை ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை மரணமான தேவகியின் வீட்டுக்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் முன்னைய பகையை வைத்துக்கொண்டு இரு சாராரும் கைகலப்பில் ஈடுபட்ட போது தேவகி என்பவர் இரும்பு கம்பியால் தலையில் தாக்கப்பட்டு, செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்