கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து குழு வருகை!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து குழுவொன்று வருகைத் தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

6 பேர் கொண்ட குழு ஒன்றே இவ்வாறு வருகை தரவுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரையிட் கசிவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டது.

இதனையடுத்து, தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்