யாழ்ப்பாணத்தில் மதுபான சாலைகளுக்கு சீல்!

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளுக்கு முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படும் காலப்பகுதியில் மதுபானசாலைகளைத் திறக்க அனுமதியில்லை என அறிவுறுத்தியுள்ளது.

அதனால் நாடுமுழுவதும் மதுபானசாலைகள் மதுவரித் திணைக்களத்தினரால் பூட்டப்பட்டு முத்திரையிடப்படுகிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.