கடலில் கரையொதுங்கிய பொருட்களை சேகரித்தவர்களுக்கு ஒவ்வாமை

எக்ஸ்பிறஸ் பேர்ள்ஸ் கப்பலில் இருந்து கடலில் மிதந்து வரும் பொருட்களை எடுக்க கடலுக்குச் சென்றவர்கள் ,பொருட்களை தொட்ட சிலருக்கு  ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நச்சு இரசாயனங்கள் இருப்பதாக அதிகாரிகளின் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், எரியும் கப்பலில் இருந்து மிதக்கும் பொருட்களை சேகரித்த கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் ஒவ்வாமைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என கூறப்படுகிறது.

அவர்களுக்கு தோலின் மேற்பரப்பில் கொப்புளங்கள், புள்ளிகள் மற்றும் அரிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பொருட்கள் சேகரிக்கும் போது கைகால்கள் கடல்நீருக்குள் அதிகமாக சென்ற இடங்களில் இந்த கொப்புளங்கள் அதிகம் காணப்படுகின்றன என்று கூறப்படுகிறது.தனிமைப்படுத்தல் விதிகளை மீறி குறித்த பொருட்களை பலர் சேகரித்துச் சென்றனர். அவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்