பயணத்தடை அமுலிலுள்ள போது, யாழில் வீதியில் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டு!

நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலிலுள்ள நிலையில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி கரம்பகம் பகுதியில் இன்று(27) நண்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதில் கையில் காயமடைந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்