சுவசெரிய அம்பியுலன்ஸில் குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவம்

கொழும்பில் சுவசெரிய அம்பியுலன்ஸில் குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

தாயும் குழந்தையும் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும், இவர்கள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலை 1990 சுவசெரிய சேவையில் பயணியாற்றும் ரவிந்து அம்பியுலன்ஸிற்கு வெளியே வரும் போது கையில் குழந்தையுடன் வந்தார். குழந்தை குறித்து அவரிடம் வினவிய போது,

“மிஸ் நாங்கள் தற்போது இந்த குழந்தையை பிரசவித்தோம். பிரசவித்த குழந்தையே இது. குழந்தையின் தாய் உள்ளே உள்ளார். எங்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்தது. தனக்கு பிரச வலி வந்துவிட்டதாக பெண் ஒருவர் கூறினார்.

உடனடியாக சென்று பார்க்கும் போது குழந்தை பிரசவிக்கும் நிலையில் இருந்தார். அம்பிபுலன்ஸில் ஏறியதும் குழந்தை பிறந்துவிட்டது. நான் தான் குழந்தையை வெளியே எடுத்தேன் என ரவிந்து குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.