பயணக்கட்டுப்பாட்டை மீறி நடந்தபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

[நூருல் ஹுதா உமர்]

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் பயணக்கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொவிட்-19 கொரோணா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது இதனை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுடன் இணைந்து சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது மற்றும் முகக் கவசம் அணியாமல் தனது வீட்டிற்கு முன்  உரையாடி நின்றவரின் வீடும் தனிமைப்படுத்தப் பட்டது.

இறுக்கமான செயற்பாடுகள் மக்களின் நலன் கருதியே மக்களது ஒத்துழைப்பின்றி இந்த கொவிட்-19 கொரோணா வைரசினை கட்டுப்படுத்த முடியாது. 3 வது அலையில் சாய்ந்தமருதில் 3 தொற்றாளர்கள் அடையாம் காணப்பட்டனர்.  தற்பொழுது 2 பேர் சிகிச்சையினை பூரணமான முறையில் பெற்று வீடு திரும்பியுள்ளனர் ஒருவர் மாத்திரமே சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.”வரும் முன் காப்போம்மக்கள் சுகாதாரத் துறையினருக்கும் பாதுகாப்பு துறையினருக்கும் ஒத்துழைப்பு வழங்கி இந்த கொரோணா தொற்றை எமது பிரதேசத்தில் பூச்சிய நிலைமைக்கு கொண்டுவர ஒத்துழைப்பு வழங்குங்கள்” என சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் மக்களை கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்